Friday, January 25, 2013

All about our Indian Army


நாட்டைக் காக்கும் நம் வீரர்கள்!

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில்  ‘புதிய தலைமுறை கல்வி’ வழங்கும் பகுதி இது.

சுதந்திர இந்தியாவில் 1949-ஆம் ஆண்டு  ஜனவரி 15-ஆம் தேதி, முதல் இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக கே.எம். கரியப்பா பதவியேற்றதை நினைவுகொள்ளும் வகையில் ஜனவரி 15-ஆம் தேதி ராணுவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு படைகள் நவீனமயமாகின. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நவீன ராணுவப் படையை உருவாக்கினர். இப்படை இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திற்கு ஆதரவாக போரிடவும் செய்தது. இரண்டம் உலகப் போரின்போது ஆங்கிலேய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட படைதான் இந்திய தேசிய ராணுவம். 1942-ல் சிங்கப்பூர், ஜப்பானால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிகாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது.

இது ஜப்பானின் உதவியுடன் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் ஜப்பானால் கைது செய்யப்பட்டவர்களில் ஆங்கிலேய ராணுவத்தில் இந்திய போர்க்கைதிகள் இருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்து சென்றவர்களாகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

இதன் படைத்தலைவராக மோகன் சிங் இருந்தார். ஆனால், விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீண்டும் உருவானது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன. பேரிடர் காலங்களில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 15-ஆம் தேதி ‘இந்திய ராணுவ தினம்’ கொண்டாடப்படுகிறது.

போரில் உயிர் நீத்த, பேரிடர் காலங்களில் மீட்புப்பணியில் இருக்கும்போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அவர்களது தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, விருதுகளை வழங்கி கௌரவிப்பார்கள்.

1949-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி (ஜெனரல் பூச்சரிடமிருந்து) இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய ராணுவம் குறித்த தகவல்களைப் பார்ப்போம்...

உலகிலேயே அதிக அளவிலான வீரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் தற்போதைய புள்ளிவிவரங்களின்படி 94 லட்சம் படை வீரர்களுடன் வடகொரியா முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து தென் கொரியாவும், வியட்நாமும் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா 47,68,407 வீரர்களுடன் நான்காமிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில் சீனா, ஈரான், அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை உள்ளன. 11-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது (இந்த வீரர்கள் பட்டியலில் முழு நேர ராணுவத்தினர், பகுதி நேர ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் அடங்குவர்).

ஆனால், முழு நேர ராணுவப்பணியில் அதிகமான வீரர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் 22 லட்சத்து 85 ஆயிரம் வீரர்களுடன் சீனா முதலிடத்திலும், 14 லட்சத்து 58 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்கா இரண்டாமிடத்திலும், 13 லட்சத்து 25 ஆயிரம் வீரர்களுடன் இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளன. 6 லட்சத்து 17 ஆயிரம் வீரர்களுடன் பாகிஸ்தான் ஆறாமிடத்தை வகிக்கிறது.

மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் சீனா (45,85,000), அமெரிக்கா (29,27,754)வுடன் ஒப்பிடும்போது இந்திய ராணுவமே (47,68,407) முதலிடம் பிடித்துள்ளது. சேவை, தியாகம், தேசப்பற்று ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டுவிளங்கும் இந்திய ராணுவம், நாட்டின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இதனால் இனம், மொழி, சமய பேதம் பாராமல் நாட்டைப் பாதுகாக்க முடிகிறது.

 இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை இவற்றுடன் சேர்த்து நான்காவதாக கடலோரக் காவல்படையும் இயங்கி வருகிறது.

நிலப்பரப்பு அடிப்படையில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ள இந்தியா, 32,87, 263 ச.கி.மீ.  அளவில் பரந்து விரிந்து இருக்கிறது. 2010-ஆம் ஆண்டு நிலவரப்படி நிலப்பகுதியைப் பாதுகாக்கும் தரைப்படையினரின் எண்ணிக்கை 13,25,000 ஆகும். துணை ராணுவத்தினர் 13,00,586 பேரும் பகுதி நேர ராணுவ வீரர்கள் 21,42,821 பேரும் தரைப்படைக்கு துணையாக இருக்கின்றனர்.

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய கடற்படையில் 55,000 வீரர்களும், இந்திய விமானப்படையில் 1,70,000 வீரர்களும், இந்திய கடலோரக் காவல் படையில் 19,741 வீரர்களும் உள்ளனர்.

கடலோரக் காவல் படை (Coast Guard) 1977-ஆம் ஆண்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டு, ஆகஸ்டு 18, 1978-ல் சட்டமியற்றப்பட்டு, முறையாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இதன் பணி இந்திய கடல் பகுதிகளில் அந்நியர் ஊடுவருவல் தடுப்பு, கடத்தல் நடப்பதைத் தடுப்பது, இந்திய கடல் எல்லையைக் காப்பது, இந்திய கடல் வளங்களைக் காப்பது, இந்திய கப்பல்களை பாதுகாப்பது உள்ளிட்டவையாகும்.

ராணுவச் செலவினங்களைப் பொருத்தமட்டில் இந்திய ராணுவம் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆயுத இறக்குமதியைப் பொருத்தவரை இந்தியா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. பிரமாண்டமான ராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதி புதிய தளவாடங்கள் வாங்கவும், இருக்கும் உபகரணங்களை மேம்படுத்தவும் செலவிடப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் பலம் (2011 நிலவரப்படி)

மொத்த மக்கள் தொகை------------------------------------- 1,21,01,93,422
முழுநேர ராணுவப்பணியில்-------------------------------13,25,000
துணை ராணுவப்படையில்---------------------------------13,00,586
பகுதிநேர ராணுவப்படையில்------------------------------21,42,821

நில அமைப்பு

இந்தியாவின் நிலப்பரப்பு-------------------------------------32,87,263 ச. கி.மீ.
இந்தியாவின் நீர்வழிப் பரப்பு--------------------------------14,500 கி.மீ.
இந்திய கடலோர எல்லை-----------------------------------7,517 கி.மீ.
பிறநாடுகளுடனான எல்லைப்பரப்பு---------------------15,200 கி.மீ.

 நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்- 2012ன் படி)

பாதுகாப்புத் துறை----------------------------------------------ரூ. 1,93,408 கோடி

தளவாடப் போக்குவரத்து

தரைவழிப் பாதைகளின் நீளம்-------------------------------33,20,410 கி.மீ.
ரயில் பாதைகளின் நீளம்--------------------------------------63,974 கி.மீ.

தரைப்படை

அதிநவீன ஆயுதங்கள்------------------------------------------75,191
அதிநவீன டாங்கிகள்---------------------------------------------5,000
பீரங்கிகள்------------------------------------------------------------3,000
விமான எதிர்ப்புப் பீரங்கிகள்----------------------------------10,000
தானியங்கிப் பீரங்கிகள்-----------------------------------------100
ஏவுகணை வீசும் டாங்கிகள்-----------------------------------292
ராக்கெட் லாஞ்சர் பீரங்கிகள்-----------------------------------5,000
எளிதில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள்-----------------51,799
இன்ன பிறவகை ஆயுதங்கள்----------------------------------15,508
ராணுவ வாகனங்கள்---------------------------------------------70,000

 விமானப்படை

போர் விமானங்கள்------------------------------------------------2,462
ஹெலிகாப்டர்கள்--------------------------------------------------848
விமானத் தளங்கள்-------------------------------------------------352

 கப்பற்படை

போர்க்கப்பல்கள்----------------------------------------------------175
வாணிபக் கப்பல்கள்-----------------------------------------------324
முக்கியமான துறைமுகங்கள்---------------------------------7
விமானம் தாங்கிக் கப்பல்-------------------------------------- 1
ஆயுதக் கப்பல்------------------------------------------------------8
நீர்மூழ்கிக் கப்பல்---------------------------------------------------15
அதி நவீன போர்க்கப்பல்-----------------------------------------12
ரோந்துக் கப்பல்-----------------------------------------------------31
கண்ணி வெடி அகற்றும் கப்பல்------------------------------- 8
நீரிலும் நிலத்திலும் செல்லும் கப்பல்----------------------- 20

ராணுவத்தில் டாப் 10 நாடுகள்

1. அமெரிக்கா
2. ரஷ்யா
3. சீனா
4. இந்தியா
5. இங்கிலாந்து
6. துருக்கி
7. தென் கொரியா
8. பிரான்ஸ்
9. ஜப்பான்
10. இஸ்ரேல்

No comments:

Post a Comment